BIG NEWS... நொய்டாவில் போலி கால் சென்டர் சைபர் மோசடி... ஐடி வேலை ஆசையில் சிக்கிக் கொண்ட 164 வெளிநாட்டினர்... அதிர்ச்சி வீடியோ!

 
டெல்லி

  உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டா செக்டர் 136 பகுதியில் செயல்பட்டு வந்த போலி கால் சென்டர் மற்றும் சைபர் மோசடி கும்பலிடமிருந்து 164 வெளிநாட்டினரை டெல்லி போலீசார் மீட்டுள்ளனர். ஐடி வேலை வாங்கித் தருவதாக ஆசைகாட்டி அழைத்து வரப்பட்ட இவர்களில் 92 இந்தோனேசியர்கள் மற்றும் 72 மலேசியர்கள் அடங்குவர்.

போலி சமூக வலைதளக் கணக்குகள் மூலம் பழகி, போலியான இணையதளங்கள் மற்றும் செயலிகள் வழியாக முதலீடுகளை ஈர்த்து மோசடியில் ஈடுபட இவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. பணிக்குச் சேர்ந்த மலேசிய நாட்டவர் ஒருவர் பாஸ்போர்ட்டைக் கொடுக்க மறுத்து வெளியேறித் தூதரகம் மற்றும் போலீசாரிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திலிருந்து 174 பாஸ்போர்ட்கள், 355 செல்போன்கள், 168 கணினிகள் மற்றும் லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தலைமறைவான முக்கியக் குற்றவாளிகளைப் பிடிக்கவும், வங்கிக் கணக்குகளை முடக்கவும் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.