அடேங்கப்பா…! ஆக்சிஜன் இல்லாம யாருமே சாகலை! டெல்லியிலும் ஒரு தெர்மாக்கோல் அமைச்சர்!

அடேங்கப்பா…! ஆக்சிஜன் இல்லாம யாருமே சாகலை! டெல்லியிலும் ஒரு தெர்மாக்கோல் அமைச்சர்!

கொரோனா 2ம் அலை பரவலின் போது ஆக்சிஜன் பற்றாக்குறையால் நாட்டில் யாருமே சாகவில்லை என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் பதில் அளித்துள்ளது. இந்த பதிலுக்கு எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அடேங்கப்பா…! ஆக்சிஜன் இல்லாம யாருமே சாகலை! டெல்லியிலும் ஒரு தெர்மாக்கோல் அமைச்சர்!

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரின் 2ம் நாளான நேற்று கொரோனா தொற்று பாதிப்புகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்ட போது நாட்டில் கொரோனாவால் பலியானவர்கள் குறித்து காங்கிரஸ் கட்சியின் கே.சி.வேணுகோபால் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மத்திய இணையமைச்சர் பாரதி ப்ரவின் பவார், கொரோனா 2ம் அலையின் போது ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் இறந்ததாக மாநிலங்கள் தெரிவிக்கவில்லை எனத் தெரிவித்தார்.

அடேங்கப்பா…! ஆக்சிஜன் இல்லாம யாருமே சாகலை! டெல்லியிலும் ஒரு தெர்மாக்கோல் அமைச்சர்!

இந்தியா முழுவதுமே ஆக்சிஜன் பற்றாக்குறையால் பல மரணங்கள் ஏற்பட்டதை அனைவருமே கண்டனர். அதுவும், தலைநகர் டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். முழு பூசணிக்காயை இலையில் இருக்கும் ஊறுக்காயில் மறைக்கும் விதமாக பேசிய மத்திய இணையமைச்சரின் இந்த பதிலுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

From around the web