வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை - கொரிய தீபகற்பத்தில் பதற்றம்!

 
வடகொரியா

அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா தொடர்ந்து பல்வேறு ஆயுதச் சோதனைகளை நடத்தி வரும் நிலையில், தற்போது மீண்டும் ஒரு புதிய ஏவுகணைச் சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

வடகொரியா கிம்

வடகொரியாவின் துறைமுக நகரமான வின்சன் பகுதியில் இருந்து ஒரே நேரத்தில் 4 ஏவுகணைகள் ஏவப்பட்டுச் சோதனை செய்யப்பட்டன. இந்த ஏவுகணைகள் கொரிய தீபகற்பப் பகுதியில் சுமார் 700 கிலோமீட்டர் தொலைவைக் கடந்து சென்று தென் கொரியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் விழுந்தன.

வடகொரியா ஏவுகணை சோதனை

வடகொரியாவின் இந்தத் திடீர் ஏவுகணைச் சோதனையைத் தொடர்ந்து, தென் கொரியா உடனடியாகத் தேசியப் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டி அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. இதனால் கொரிய தீபகற்பப் பகுதியில் மீண்டும் போர் மேகங்களும் பதற்றமான சூழலும் உருவாகியுள்ளது.