வடகொரிய பாதுகாப்பு அமைச்சர் திடீர் நீக்கம் - அதிபர் கிம் ஜாங் அதிரடி!

 
வடகொரியா

வடகொரியாவின் பாதுகாப்பு அமைச்சர் நோ குவாங் சோல் திடீரென தனது பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அதிபர் கிம் ஜாங் அன் தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் இந்த அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ராணுவ அரசியல் பிரிவு இயக்குநராகப் பதவி வகித்து வந்த கிம் சாங் கி, நாட்டின் புதிய பாதுகாப்பு அமைச்சராக அதிபர் கிம் ஜாங் அனால் நியமிக்கப்பட்டுள்ளார்.

வடகொரியா கிம்

பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் நோ குவாங் சோல், ஆயுதத் தொழில்துறை துறையின் முதல் துணை இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். ராணுவத்தின் தலைமைப் பொறுப்புகளில் பலத்த பலத்த மாற்றங்களைச் செய்யும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.