வடமாநில தொழிலாளர்கள் விவகாரம்.. சீமான் மீது வழக்கு பதிவு.. பரபரப்பு !!

 
சீமான்

வடமாநில தொழிலாளர்கள் குறித்து அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த நில நாட்களுக்கு முன்னர் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை

ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக இது குறித்து தமிழக காவல்துறை விசாரணையில் இறங்கியது. அப்போது வெளியான வீடியோக்கள் அனைத்தும் போலியான வீடியோ என தெரியவந்துள்ளது. 
சீமான்

மேலும் பீகார், உத்தரபிரதேசத்தை சேர்ந்த பாஜக நிர்வாகிகள் தான் இவ்வாறு போலியான வீடியோக்கள், போலி செய்திகளை பரப்பியது அம்பலமானது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக காவல்துறை தனிப்படை பீகார், டெல்லியில் முகாமிட்டுள்ளது.

இதனிடையே வடமாநிலத்தவர்கள் குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. இந்த நிலையில், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது வடமாநில தொழிலாளர் குறித்து சீமான் அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது. இந்நிலையில், சீமான் மீது வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு கருங்கல்பாளையம் காவல் துறையினர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். வட மாநிலத்தவர்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசிய புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 13-ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் வட மாநில தொழிலாளர்கள் குறித்து அவதூறாக பேசியதாக புகார் எழுந்துள்ளது.

சீமான்

முன்னதாக, அரசியல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர், சீமான் பேசிய வீடியோவை பகிர்ந்து, அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என குறிப்பிட்டிருந்தார். 

From around the web