சென்னையில் பரபரப்பு... 1425 கிலோ தங்கம் பறிமுதல் ... 400 கிலோவுக்கு மட்டுமே ஆவணங்கள்... மொத்தமாக பறிமுதல் செய்த அதிகாரிகள்!

 
தங்கம்

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்க அரசியல் கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து தேர்தல் ஆணையம் சார்பில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வாகனங்கள் நிறுத்தப்பட்டு, ஆவணங்கள் இல்லாமல் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 50,000 ரூபாய்க்கு மேல் ரொக்கம் பறிமுதல் செய்யப்படுகிறது. அந்த வகையில் தேர்தல் ஆணையம் சார்பில் 155 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம், பரிசு பொருட்கள், மதுபானங்கள், 324 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில் நேற்றிரவு சென்னை விமான நிலையத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குன்றத்தூர் அருகே பன்னாட்டு நிறுவனத்திற்கு சொந்தமான வாகனம் புறப்பட்டது. வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் 1425 கிலோ தங்கம் கொண்டுவரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, தேர்தல் பறக்கும் படையினர் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் 400 கிலோ தங்கத்துக்கு மட்டுமே ஆவணங்கள் இருந்ததால் 1425 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது. வருமான வரித்துறை அதிகாரிகள் மூலம் ஆவணங்களை சரிபார்த்த பின், ஆவணங்கள் இல்லை என்றால் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைக்கப்படும் என உதவி தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web