டிவியை எப்போது வேணும்னாலும் உடைச்சுக்கலாம்... தேர்தலில் போட்டியிடாதது தியாகம் கிடையாது... நடிகர் கமல் பரபரப்பு!

 
கமல்

டிவியை எப்போது வேண்டுமானாலும் உடைத்து கொள்ளலாம். ஆனால், பேட்டரியைப் பிடுங்கி வைத்துக் கொள்பவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தேர்தலில் போட்டியிடாதது தியாகம் அல்ல, வியூகம் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான நடிகர் கமல்ஹாசன் பேசியுள்ளார். 

மக்கள் நீதி மய்ய தலைவர் நடிகர் கமல்ஹாசன்.

சென்னையில் இன்று மையம் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நடிகர் கமல்ஹாசன் நிர்வாகிகளிடையே பேசும் போது, “என் சிறுவயது முதலே என் பிரதான எதிரி சாதிதான். எந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அடிமைப்பட்டு கிடப்பவர்கள் யார் என்பதை கண்டறிய, சாதிவாரி கணக்கெடுப்பு தேவை. தேர்தலில் போட்டியிடாதது தியாகம் அல்ல. அது வியூகம். இப்போது ஒரு தொகுதி, 2 தொகுதி என்றில்லாமல் தமிழ்நாடு முழுவதும் சென்று பிரசாரம் மேற்கொள்ள முடியும்.” என்றார்.

 “திமுகவை விமர்சித்து ரிமோட்டை தூக்கி போட்டு டிவியை உடைத்து விட்டு, இப்போது கூட்டணியா என கேட்கிறார்கள். நமது டிவி, நமது ரிமோட். அது இங்கு தான் இருக்கும். எப்போது வேண்டுமானாலும் உடைத்து கொள்ளலாம். டிவிக்கான கரண்ட், ரிமோட்டுக்கான பேட்டரியை எடுக்க நினைப்பவர்கள் தான் நமக்கு இப்போது முக்கியம்” எனவும் அவர் விளக்கமளித்தார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web