எலெக்ஷன் முடிஞ்சு ஒரு மாசம் கூட முழுசா முடியலை... அம்பாசமுத்திரம் தொகுதி காலியானதாக அறிவிப்பு - மொத்தம் 5 இடங்களில் இடைத்தேர்தல்!
அதிமுக எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதி காலியானதாகச் சட்டப்பேரவை செயலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
தமிழக அரசியல் களம் இன்று அடுத்தடுத்த அதிரடி திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. இன்று காலையில் தான் மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகள் காலியானதாகச் சட்டப்பேரவை செயலகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, அம்பாசமுத்திரம் தொகுதியின் அதிமுக எம்.எல்.ஏ-வாக இருந்த இசக்கி சுப்பையா இன்று தனது பதவியை முறைப்படி ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவைத் தொடர்ந்து, அம்பாசமுத்திரம் தொகுதியும் காலியானதாகச் சட்டப்பேரவை செயலகம் தற்போது அறிவித்துள்ளது.
முதலமைச்சர் விஜய் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து ஏற்கனவே திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து இன்று ஒரே நாளில் மேலும் 4 தொகுதிகள் காலியாகியுள்ளன.
| வரிசை எண் |
காலியான தொகுதி |
முன்னாள் எம்.எல்.ஏ |
| 1 |
திருச்சி கிழக்கு |
முதலமைச்சர் விஜய் |
| 2 |
மதுராந்தகம் |
- |
| 3 |
பெருந்துறை |
- |
| 4 |
தாராபுரம் |
- |
| 5 |
அம்பாசமுத்திரம் |
இசக்கி சுப்பையா (அதிமுக) |

தமிழகத்தில் ஏற்கனவே அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வரும் சூழலில், இன்று ஒரே நாளில் அடுத்தடுத்து நான்கு தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
