"எல்லாரும் எம்ஜிஆர், விஜய் ஆகிட முடியாது" - தனுஷ், சிவகார்த்திகேயன் அரசியல் குறித்து துரைமுருகன் பேட்டி!

 
துரைமுருகன்

நடிகர்கள் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் அரசியலுக்கு வரப்போவதாக பரவி வரும் தகவல்கள் குறித்துப் பேசிய திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், "எல்லாரும் எம்ஜிஆர், விஜய் ஆகிவிட முடியாது" எனத் தனக்கே உரிய பாணியில் விமர்சித்துள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் இன்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது நிருபர்கள், "நடிகர்கள் சிவகார்த்திகேயன், தனுஷ் ஆகியோர் அடுத்தடுத்து அரசியலுக்கு வரப் போவதாகத் தகவல்கள் வெளியாகிறதே?" எனக் கேள்வி எழுப்பினர்.

துரைமுருகன்

அதற்குப் பதிலளித்துப் பேசிய துரைமுருகன், "ஒருத்தர் வைத்த இளநீர்க் கடையில் வியாபாரம் நன்றாக நடப்பதைப் பார்த்தவுடன், உடனே மற்றவர்களும் அதே இடத்தில் கடை வைப்பது போலத்தான் நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள்" என நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், "சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து வெற்றி பெற எல்லாராலும் முடிந்துவிடாது; எல்லாரும் எம்ஜிஆர், விஜய் ஆகிவிட முடியாது" என்றும் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

துரைமுருகன்

தமிழக அரசியலில் தவெக தலைவராக விஜய் களம் இறங்கியுள்ள சூழலில், அடுத்தடுத்த நடிகர்களின் அரசியல் வருகை குறித்து துரைமுருகன் அளித்த இந்தப் பேட்டி சமூக வலைத்தளங்களிலும் அரசியல் வட்டாரத்திலும் கவனத்தைப் பெற்றுள்ளது.