“சத்தியபாமா இல்லை... அவர் பெட்டிபாமா!” – தாராபுரத்தில் உதயநிதி அதிரடிப் பேச்சு!
தாராபுரம் தொகுதி திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்துத் தீவிரத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழக அரசு மற்றும் தவெகவை கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.

திமுக வேட்பாளர் சுகன்யா படித்தவர், வழக்கறிஞர் மற்றும் சட்டமன்றத்தில் மக்களுக்காகக் குரல் கொடுக்கும் ஆற்றல் படைத்தவர் என்று புகழாரம் சூட்டிய அவர், தவெக வேட்பாளரை கடுமையாக விமர்சித்தார்.
தவெகவில் கட்சித் தலைவர்களுக்குச் சோபாவும், எம்.எல்.ஏ.க்களுக்குப் பெட்டியும் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அதனால்தான் மக்கள் அவரைச் 'சத்தியபாமா' என்பதற்குப் பதிலாக 'பெட்டிபாமா' என்று அழைப்பதாகவும் உதயநிதி கிண்டலடித்தார்.

மேடையில் கத்துவதைத் தவிர வேறு எதற்கும் தவெக அரசுக்கு வக்கில்லை என்றும், சட்டம்-ஒழுங்கு, மின்வெட்டு மற்றும் விலைவாசி உயர்வு போன்ற பிரச்சனைகளைக் கட்டுப்படுத்தத் தவறியுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய 18 கேள்விகளுக்கும் முதலமைச்சர் விஜய் இதுவரை முறையான பதிலளிக்கவில்லை எனவும் அவர் சாடினார்.
