அஜித் படப்பிடிப்பில் உயிரிழந்த பிரபல கலை இயக்குனர்.. சென்னை வந்த உடல்.. சோகத்தில் ரசிகர்கள்..!

 
கலை இயக்குனர் மிலன்
அஜர்பைஜான் நாட்டில் உயிரிழந்த பிரபல கலை இயக்குனர் மிலனின் உடல் சென்னைக்கு வந்தடைந்தது.

 2006ஆம் ஆண்டு வெளியான கலாபக் காதலன் திரைப்படத்தின் மூலம் கலை இயக்குனராக அறிமுகமானவர் மிலன். இவர் வேலாயுதம், வீரம், அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் கலை இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். இவர் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் 'விடாமுயற்சி' திரைப்படத்தில் கலை இயக்குனராக பணியாற்றி வருகிறார்.

Vidaamuyarchi art director milan passed away : கலை இயக்குனர் மிலன் மரணம்...  அஜித்தின் விடாமுயற்சி பட ஷூட்டிங் ஸ்பாட்டில் உயிரிழந்த சோகம்

இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கலை இயக்குனர் மிலன் அஜர்பைஜான் நாட்டில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அதாவது, மிலன் நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், பாதிவழியிலேயே மிலன் உயிர் பிரிந்துள்ளது.

அதிர்ச்சி.. விடாமுயற்சி பட கலை இயக்குநர் மிலன் மாரடைப்பால் மரணம்..  சோகத்தில் மூழ்கிய திரையுலகம் | Vidamuyarchi Art Director Milan passes away  due to heart attack - Tamil ...

இந்நிலையில், அஜர்பைஜான் நாட்டில் இருந்து மிலனின் உடல் சென்னை வந்தடைந்தது. சென்னையில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு தமிழ் திரையுலகினர், உறவினர்கள், பொதுமக்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.

From around the web