பெங்களூருவில் பிரபல மருத்துவர் கே.எம்.செரியன் காலமானார்... பிரபலங்கள் இரங்கல்!

 
செரியன்

பிரபல இதயமாற்று அறுவை சிகிச்சை மருத்துவர் கே.எம்.செரியன் நேற்று உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் பெங்களூருவில் காலமானார்.

பெங்களூரில் கடந்த சனிக்கிழமை அன்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட மருத்துவர் செரியன், திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவரை பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்தனர். 

செரியன்

இந்நிலையில் நேற்று நள்ளிரவு 11 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். அவரது இறுதிச்சடங்குகள் வரும் வியாழக்கிழமை நடைபெறும் என்று அவரது மகள் சந்தியா செரியன் தெரிவித்துள்ளார்.

செரியன்

இந்தியாவில் எவரும் செய்யாத அரியதொரு மருத்துவ சாதனையாக, ஏற்கனவே மூளைச்சாவு அடைந்த நோயாளியிடமிருந்து இதயத்தை எடுத்து அதனை இதய மாற்று  அறுவைச் சிகிச்சை தேவைப்படும் நபருக்கு பொருத்தி வெற்றிகரமாக அறுவைச் சிகிக்சையை செய்து காட்டியவர் மருத்துவர் செரியன். 

அவரது மறைவு மருத்துவத்துறையில் ஈடு செய்ய இயலாத பேரிழப்பாக கருதப்படுகிறது. டாக்டர் செரியன் மறைவிற்கு பல்வேறு  பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web