இனி வாட்ஸ்அப்லேயே 'ரீசார்ஜ்' செய்யலாம்.. மெட்டா வழங்கிய அதிரடி வசதி!

 
வாட்ஸ் வாட்ஸ்

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை உலகில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் வகையில், மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப் யுபிஐ (WhatsApp UPI) தளத்தில் நேரடியாக மொபைல் ரீசார்ஜ் செய்யும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ ஆகிய முன்னணி நிறுவனங்களின் பயனர்கள் தங்களது மொபைல் எண்களை வாட்ஸ்அப் மூலமாகவே ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும்.

அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் பயனர்களுக்கு இந்த வசதி இன்னும் ஒரு சில வாரங்களில் பயன்பாட்டுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்

வாட்ஸ்அப் 'பேமெண்ட்ஸ்' (Payments) பகுதிக்குள் சென்று, ரீசார்ஜ் ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து, தங்களுக்குத் தேவையான பிளானை (Plan) தேர்வு செய்து வாட்ஸ்அப் யுபிஐ மூலமே பணத்தைச் செலுத்தலாம்.

ஜிபே (GPay), போன்பே (PhonePe) அல்லது அந்தந்த நிறுவனங்களின் பிரத்யேக செயலிகளைத் தேடிச் செல்ல வேண்டிய அவசியம் இனி இருக்காது. நாம் தினமும் பயன்படுத்தும் வாட்ஸ்அப்பிலேயே சாட்டிங் செய்து கொண்டே ரீசார்ஜ் பணிகளை முடித்துக் கொள்ளலாம் என்பது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

வாட்ஸ் அப்

இதன் மூலம் வாட்ஸ்அப் தனது இ-காமர்ஸ் மற்றும் நிதிச் சேவைப் பிரிவை இந்தியாவில் வலுப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்த நிலையில், இன்று காலை முதல் இந்த டிஜிட்டல் வசதி குறித்த செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.