அக்.6 இடைத்தேர்தல்: 3 தொகுதிகளுக்கு நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு!

 
இடைத் தேர்தல்

 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.வரும் அக்டோபர் 6-ம் தேதி மதுராந்தகம், தாராபுரம் மற்றும் புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 3 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது.

தேர்தல்

அதன்படி, மதுராந்தகம் தொகுதியில் கோ.ஜானகிராமன், தாராபுரம் தொகுதியில் மு.கார்த்திகா, புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் ச.கார்த்திக் குமாரி ஆகியோர் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட உள்ளதாக கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

இடைத்தேர்தலில் கட்சியின் வெற்றிக்காக அனைத்து பொறுப்பாளர்களும் முழு ஒத்துழைப்புடன் தேர்தல் பணியாற்ற வேண்டும் என்றும் கட்சித் தலைமை கேட்டுக்கொண்டுள்ளது.இந்த இடைத்தேர்தலில் ஏற்கனவே பல்வேறு கட்சிகள் தங்களது வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் பணிகள் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிவிப்பும் தேர்தல் களத்தை மேலும் சூடுபிடிக்கச் செய்துள்ளது