சாலை விபத்தில் செவிலியா் மரணம்... அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் அஞ்சலி!
தூத்துக்குடி கோரம்பள்ளம் இ.பி. காலனியைச் சோ்ந்த ஜெகன் மனைவி சுகப்பிரியா (38). தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தாா். இவா் நேற்று மதியம் வேலைக்கு மொபட்டில் சென்றுகொண்டிருந்தாராம். அவா் பாளையங்கோட்டை சாலை டீச்சா் காலனி அருகே சென்று கொண்டிருந்த போது, மழை நீா் தேங்கிக் கிடந்த பள்ளத்தில் மொபட் சிக்கியதாக கூறப்படுகிறது.

அப்போது பின்னால் வந்த சாயா்புரத்தைச் சோ்ந்த பாலமுருகன் (44) என்பவரின் பைக் இவா் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த இருவரையும் மீட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சுகப்பிரியா சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்தாா். இது குறித்து தென்பாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் செவிலியா் சுகப்பிரியாவின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி கோரம்பள்ளத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து நடைபெற்றது. முன்னதாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் செவிலியர் சுகப்பிரியா உடலுக்கு அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சிவகுமார், உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!
