செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி செவிலியர்கள் கவன ஈர்ப்புப் போராட்டம்!
Aug 6, 2026, 16:30 IST
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் நோயாளிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படும் தொகுதிப்பூதிய முறையைக் உடனடியாக ரத்து செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். செவிலியர் பணியிடங்களைக் குறைக்கும் நோக்கில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையைத் திரும்பப் பெற வேண்டும்.

செவிலியர்களின் இந்தப் போராட்டத்தின் காரணமாக மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக வரும் பொதுமக்கள் மற்றும் உள்நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே, பொதுமக்கள் நலன் கருதி மாநில அரசு உடனடியாகச் செவிலியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திப் பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
