அழுது கொண்டே இருந்த பச்சிளம் குழந்தை.. ஆத்திரத்தில் குழந்தையின் வாயில் டேப் ஒட்டிய செவிலியர்கள்!

 
குழந்தை வாயில் டேப்

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பத்லாபூரை சேர்ந்தவர் பிரியா காம்ப்ளே. மே 20ஆம் தேதி கர்ப்பமாக இருந்த பிரியா காம்ப்ளே, அங்குள்ள சாவித்ரிபாய் பாஹ்லே மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரியாவுக்கு அன்றே குழந்தை பிறந்தது.

Savitribai Jyotiba Phule Maternity Home in Bhandup West,Mumbai - Best  Maternity Hospitals in Mumbai - Justdial

மே 31 அன்று, குழந்தைக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், குழந்தையை அங்குள்ள பிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு குழந்தைக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் 02-ம் தேதி குழந்தை உடல் நலக்குறைவால் அழ ஆரம்பித்தது தெரிந்தது.

இதனால், பணியில் இருந்த செவிலியர்கள் குழந்தையின் அழுகையை நிறுத்த முயன்றும் பலனில்லை. இதனால் அங்கு வேலை செய்து கொண்டிருந்த ஸ்வேதா, சவிதா போய் உள்ளிட்ட 3 செவிலியர்கள் குழந்தையின் வாயில் டேப்பை ஒட்டினர். NICU மருத்துவமனையில் இது வழக்கமான நடைமுறைதான் என்று அவர்கள் தங்கள் கருத்தைத் தெரிவிக்கிறார்கள்.

Three BMC Nurses Paste Adhesive Tape On Newborn's Mouth To Stop Crying,  Booked - Mumbai Pulse

இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தவே, குழந்தையின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், மகாராஷ்டிரா மாநில மனித உரிமைகள் ஆணையத்திலும் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் தற்போது விசாரணை நடந்து வருகிறது. மனித உரிமை ஆணையமும் சம்பந்தப்பட்ட மருத்துவமனை காவல் துறையினருக்கு சம்மன் வழங்கி இருக்கிறது. இதன்பேரில் பாண்டுப் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web