சீன உளவாளியுடன் தொடர்பா? என்விடியா தலைவரிடம் விசாரணை – மனைவியிடம் மன்னிப்புக் கேட்ட ஜென்சன் ஹுவாங்!

 
கேரளா

 

உலகின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியாவின் (NVIDIA) தலைமைச் செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங், சீன உளவுத்துறையுடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் பெண்ணுடன் நெருக்கமாக இருந்ததாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, என்விடியா நிறுவனத்தின் இயக்குநர் குழு இது குறித்து சுயாதீன விசாரணையைத் தொடங்கியுள்ளது.

சிங்கப்பூரைச் சேர்ந்த மெகாஸ்பீட் (Megaspeed) நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகியான ஆலிஸ் ஹுவாங் என்ற பெண்ணுடன் ஜென்சன் ஹுவாங் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக அமெரிக்க ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அந்தப் பெண் சீன உளவுத்துறைக்காகத் தகவல்களைச் சேகரித்திருக்கலாம் என அமெரிக்க அதிகாரிகள் சந்தேகித்ததாகவும் கூறப்படுகிறது. மெகாஸ்பீட் நிறுவனம் என்விடியாவிடம் இருந்து செயற்கை நுண்ணறிவுக்கான அதிநவீன சிப்களை வாங்கி வந்துள்ளது.

இதையடுத்து, என்விடியா இயக்குநர் குழு வெளிப்புற சட்ட ஆலோசகர்களின் உதவியுடன் சுயாதீன விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அதேநேரத்தில், அமெரிக்க தேசியப் பாதுகாப்புக்கோ, நிறுவனத்தின் ரகசியங்களுக்கோ பாதிப்பு ஏற்பட்டதாக நம்புவதற்கு தற்போது எந்தக் காரணமும் இல்லை என நிறுவனம் தெரிவித்துள்ளது.

Nvidia launches investigation into CEO's alleged relationship with Chinese spy : NPR

இதற்கிடையே, தனது மனைவிக்கு உண்மையாக இருக்கத் தவறிவிட்டதாக ஒப்புக்கொண்ட ஜென்சன் ஹுவாங், குடும்பத்தினரிடமும் நிறுவன ஊழியர்களிடமும் மன்னிப்புக் கோரியுள்ளார். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். விசாரணை நடைபெறும் காலத்திலும் அவர் வழக்கம்போல் தலைமைச் செயல் அதிகாரியாகத் தொடர்வார் என நிறுவனம் கூறியுள்ளது