ஓ பன்னீர்செல்வத்துக்கு உடல் நலக்குறைவு... அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து!

 
ஓபிஎஸ், இபிஎஸ் நியமனம் செல்லும்! ஐகோர்ட்டு அதிரடி!

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, நேற்று அவர் பங்கேற்க இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து ரத்து செய்யப்பட்டுள்ளன. முன்னதாக தொண்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த ஓபிஎஸ்., திடீர் உடல்நலக் குறைவு காரணமாக நிகழ்ச்சிக்கு செல்லாமல் ஹோட்டல் அறையிலேயே தங்கினார்.

ஓபிஎஸ்

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தனது ஆதரவாளர்களை சந்தித்து, ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார் ஓபிஎஸ். அந்த வகையில், நேற்று முன்தினம் தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார். அதனைத் தொடர்ந்து, நேற்று அதிமுக தொண்டர்கள் மீட்புக் குழு சார்பில், நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே கங்கணாங்குளத்தில் நெல்லை நாடாளுமன்றத் தொகுதிக்கான பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. 

ஓபிஎஸ்

இதில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று பேசுவார் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஏராளமான தொண்டர்கள் கூடியிருந்த நிலையில், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கடைசி நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் கூட்டத்திற்கு வரவில்லை. திடீரென அவருக்கு தலைச்சுற்றல்  ஏற்பட்ட நிலையில் நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கி ஓய்வெடுத்தார். அவரை  தனியார் மருத்துவமனை மருத்துவர் வந்து பரிசோதித்ததாக கூறப்படுகிறது. சிகிச்சைக்கு பிறகு அவர் ஓய்வெடுத்து வருகிறார். தற்போது நலமுடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

From around the web