உடல் எடைக் குறைப்புக்கு அற்புத பயன் தரும் ஓட்ஸ்... !

 
ஓட்ஸ்

உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்திருக்க  நினைப்பவர்களுக்கு ஓட்ஸ் மிகச் சரியான தீர்வாக அமைந்துள்ளது. இரவு முழுவதும் சாப்பிடாமல் இருப்பதால் காலை உணவு  எப்போதும் ஆரோக்கியமாகவும் சத்து நிறைந்ததாகவும் இருக்க வேண்டியது அவசியம்.  ஓட்ஸை காலை உணவாக எடுத்துக் கொள்வதால்   வயிறு நிரம்புவது மட்டுமல்ல பணிபுரிய தேவையான சக்தியும் கிடைத்துவிடும்.  ஓட்ஸில் அடங்கியுள்ள  பல வகையான ஊட்டச்சத்துக்களை காரம் அல்லது இனிப்பு என எந்த சுவையில் விருப்பமோ அப்படி செய்து சாப்பிடலாம்.   தினமும் காலை உணவாக ஓட்ஸ் எடுத்துக் கொள்வதால் தேவையற்ற கொழுப்புக்கள் குறையத் தொடங்கும்.  

ஓட்ஸ்
ஓட்ஸில் உள்ள பீட்டா குளுக்கன்  செரிமான சக்தியை அதிகரித்து உடலின் ஆற்றலை அதிகரிக்க செய்கிறது.  ஓட்ஸ் சாப்பிடுவதால் புற்றுநோய் வராது என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தினமும் ஓட்ஸ் சாப்பிடுவதால் கொலஸ்ட்ராலைக் குறைக்கும் தய குழலிய நோய் உருவாவதை தடுக்கும். உடல் எடை குறைப்பிற்கு ஓட்ஸ் அருமருந்து. ஓட்ஸ்  ரத்தத்தில் உள்ள சர்க்கரையை சீராக்கும்.  குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.  மன அழுத்தத்தை அண்ட விடாது. நோய் எதிர்ப்பு சக்தியை  அதிகரிக்கும். 

இன்றைய இளைய தலைமுறையினர்  தொடர்ந்து இடைவேளை ஸ்நானஸாக  நொறுக்கு தீனிகளைத் தின்றால், இளம் வயதிலேயே தொப்பையும், கெட்டக் கொழுப்பும் உடம்பில் தேங்கத் தானே செய்யும்? ஓட்ஸ் கொடுப்போம்.  நம் பிள்ளைகளுக்கு ஆரோக்கியமான எதிர்காலத்தைக் கொடுப்போம். கூடுமான வரையில், சிறுதானியங்கள், சத்துள்ள பயறு வகைகள் போன்றவற்றை சமைத்து தாருங்கள். இந்த ஓட்ஸ் உப்புமா, குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல், பெரியவர்களுக்கும் மிகவும் பிடிக்கும். சத்தானதும் கூட.

தேவையான பொருட்கள்

உடலுக்கு பலம் தரும் ஓட்ஸ் உப்புமா!
ஓட்ஸ் -150கி
சின்ன வெங்காயம் -10
காரட் – 1
பீன்ஸ் – 5
பச்சை பட்டாணி -50கி
இஞ்சி – சிறு துண்டு
காய்ந்த மிளகாய் -2
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை

ஓட்ஸை ஊற வைக்க வேண்டும். வெங்காயம், காரட், பீன்ஸை பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். கடாயில் கடுகு தாளித்து, காய்ந்த மிளகாய், இஞ்சி துருவல், வெங்காயம் சேர்த்து வதங்கியதும் உப்பு சேர்க்க வேண்டும். ஊற வைத்துள்ள ஓட்ஸை தண்ணீருடனேயே சேர்த்து போட்டுக் கிளறி மிதமான தீயில் 5நிமிடங்கள் வேக வைத்து இறக்கி விட்டால் சுவையான ஓட்ஸ் உப்புமா ரெடி. ஓட்ஸில் புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது.

From around the web