ஹோலி கொண்டாட்டத்தில் ஆபாச நடனம்.. தட்டிக்கேட்ட இளைஞரை கொலை செய்த கொடூரம்!

 
உ.பி இளைஞர்

திங்கட்கிழமை ஹோலி தினத்தன்று மேற்கு உத்திரப் பிரதேசத்தின் வெவ்வேறு பகுதிகளில் -- குடிபோதையில் சச்சரவுகள் மற்றும் அக்கம் பக்கத்து சண்டைகள் காரணமாக -- தனித்தனி குற்றம் தொடர்பான சம்பவங்களில் குறைந்தது ஆறு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர். பரேலி நகரில் வசிக்கும் 20 வயது இளைஞன், ஹோலியில் 'நிர்வாணமாக' நடனத்தை ஆடிய இளைஞரை கண்டித்ததால் ஆத்திரமடைந்த அவர்கள் இளைஞரை தாக்கியுள்ளனர்.

இதில் இளைஞருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. கோலு ஸ்ரீவஸ்தா என்ற அந்த இளைஞரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வட்ட அதிகாரி (நகரம் 3 வது) அனிதா சவுகான் கூறுகையில், "தகராறு காரணமாக 4 பேர் கோலுவின் தலையில் செங்கல்லால் தாக்கினர். அனைவரும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள். குற்றம் சாட்டப்பட்ட 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

அழுகிய நிலையில் 15 வயது சிறுமியின் சடலம்- கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

"பரேலியின் சுபாஷ் நகரில், குடிபோதையில் ஆபசமாக இளைஞர்கள் நடனமாடியுள்ளனர். அப்போது, கோலு ஸ்ரீவஸ்தா, அவர்களை கண்டித்த போது அவரது பக்கத்து வீட்டுக்காரர்களான அந்த இளைஞர்கள் அவரை அடித்துக் கொன்றுள்ளனர்.  இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web