இந்த 3 ராசிக்காரர்களுக்கு தடைகள் விலகும் | இன்றைய ராசிபலன் | அதிர்ஷ்ட நிறமும், எண்களும்
இன்று தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுவது கூடுதல் நற்பலன்களைத் தரும்.
மேஷம்:
இன்று குடும்பத்தில் அமைதி காக்க வேண்டிய நாள். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது கணவன் - மனைவி இடையே ஒற்றுமையை பலப்படுத்தும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். வியாபாரிகளுக்குத் தேக்க நிலை மாறி, புதிய ஆர்டர்கள் கிடைக்கும். உங்களின் சாதுரியமான பேச்சு கடினமான பிரச்சினைகளையும் எளிதாகத் தீர்க்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 5, 6
ரிஷபம்:
தொழில் மற்றும் வியாபாரத்தில் நீடித்த போட்டிகள் இன்று விலகும். நீண்ட நாள் கடன் சுமைகள் குறையத் தொடங்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டும் ஒத்துழைப்பும் உங்களுக்கு உற்சாகத்தைத் தரும். மாணவர்களுக்குக் கல்வியில் இருந்த தடைகள் நீங்கி, எதிர்காலம் பற்றிய தெளிவான சிந்தனை பிறக்கும். ருசியான உணவு உண்டு மகிழ்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 4, 6
மிதுனம்:
இன்று சற்று கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். உடல் சோர்வு மற்றும் சிறு சிறு காரியத் தாமதங்கள் ஏற்படலாம். பாதியில் நின்ற வீடு கட்டும் பணிகளை மீண்டும் தொடங்குவதற்கான சூழல் அமையும். அலுவலகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. வழக்கு விவகாரங்களில் உங்களுக்குச் சாதகமான தீர்ப்பு வர வாய்ப்புள்ளது.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9

கடகம்:
குடும்ப உறுப்பினர்களின் சில செயல்களால் டென்ஷன் உண்டாகலாம், பொறுமை அவசியம். தேவையற்ற கோபத்தைத் தவிர்த்து நிதானமாகப் பேசுவது உறவுகளை மேம்படுத்தும். கலைத்துறையினருக்குப் புதிய வாய்ப்புகள் தேடி வரும். வாகனங்களை ஓட்டும்போது அதீத கவனம் தேவை. மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகரித்தாலும் கல்வியிலும் கவனம் செலுத்தவும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 9, 3
சிம்மம்:
இன்று சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு உண்டாகும். அரசியலில் உள்ளவர்களுக்குப் பணப்புழக்கம் அதிகரித்து, செல்வாக்கு உயரும். மற்றவர்களுக்குச் செய்யும் உதவியால் சமூகத்தில் நற்பெயர் எடுப்பீர்கள். மாணவர்கள் கூடுதல் கவனத்துடன் படித்தால் மட்டுமே தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற முடியும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை
அதிர்ஷ்ட எண்: 4, 5
கன்னி:
பிரிந்து சென்ற உறவினர்கள் அல்லது நண்பர்கள் மீண்டும் உங்களை நாடி வருவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கைக்கு வரும். துணிச்சலான முடிவுகள் எடுத்து காரிய வெற்றியை அடைவீர்கள். அலுவலகப் பணிகளை மிக எளிதாகச் செய்து முடிப்பீர்கள். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் அதற்கேற்ற பலன் உண்டு.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 5, 6
துலாம்:
குடும்பத்தில் மகிழ்ச்சியும் சகஜ நிலையும் காணப்படும். பூர்வீக சொத்து விவகாரங்களில் இருந்த சிக்கல்கள் சுமூகமாகத் தீரும். அரசாங்க வழியில் எதிர்பார்த்த சலுகைகள் அல்லது லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். பணவரத்து திருப்திகரமாக இருப்பதால் பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நீண்ட தூரப் பயணங்கள் அனுகூலம் தரும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்: 3, 7
விருச்சிகம்:
தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கி விறுவிறுப்பு உண்டாகும். வராத கடன் பாக்கிகள் வசூலாகும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டுத் தடைப்பட்ட காரியங்களைச் சிறப்பாக முடிப்பீர்கள். மாணவர்களுக்குக் கல்விச் செலவுகள் அதிகரித்தாலும், படிப்பில் நல்ல முன்னேற்றம் காணப்படும். முக்கிய நபர்களின் அறிமுகம் மற்றும் உதவி கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 1, 7

தனுசு:
வார்த்தைகளுக்குச் சமூகத்தில் மதிப்பு கூடும். புதிய வேலை தேடுபவர்களுக்கு இன்று நல்ல செய்தி கிடைக்கும். அலுவலகத்தில் அதிகாரமிக்க பதவிகள் உங்களைத் தேடி வரலாம். கணவன் - மனைவி இடையே மனம் விட்டுப் பேசுவதன் மூலம் முக்கிய முடிவுகளை எடுக்கலாம். அரசுத் துறையில் உள்ளவர்களுக்குச் சாதகமான பலன்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 4, 5
மகரம்:
குடும்பத்தில் சுபமான சூழல் நிலவும். எதிர்த்துப் பேசுவதைத் தவிர்த்தால் வீண் விரோதங்களைச் தவிர்க்கலாம். நீண்ட நாள் பிரிந்திருந்த தம்பதியினர் ஒன்று சேர வாய்ப்புள்ளது. வராத பணம் வந்து சேர்வதால் பொருளாதார நெருக்கடி குறையும். கடிதப் போக்குவரத்து அல்லது மின் அஞ்சல் மூலம் நல்ல தகவல்கள் வந்து சேரும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5
கும்பம்:
இன்று உற்சாகம் கரைபுரண்டு ஓடும். உல்லாசப் பயணங்கள் செல்லத் திட்டமிடுவீர்கள். எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ளும் மனவலிமை உண்டாகும். கலைத்துறையினருக்குப் போட்டிகள் இருந்தாலும் வருமானம் திருப்தி தரும். மற்றவர்களின் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நற்பெயரைக் காக்கும். பகைவர்கள் உங்கள் பலம் அறிந்து பணிந்து போவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 2, 3
மீனம்:
சமூகத்தில் அந்தஸ்து மிக்கவர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் இருந்து வந்த உடல்நலப் பாதிப்புகள் நீங்கும். பெண்களுக்குத் தைரியம் கூடும், எதையும் சாதிக்கும் ஆற்றல் பிறக்கும். மாணவர்கள் கடினமான பாடங்களையும் விடாமுயற்சியுடன் படித்து வெற்றி பெறுவீர்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திடாமல் இருப்பது பண இழப்பைத் தவிர்க்க உதவும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 1, 2
