தினமும் உணவளித்தவரைக் கட்டியணைத்த குரங்கு: வைரல் வீடியோ!

 
குரங்கு

 

தினமும் உணவளித்து வந்த கடைக்காரரை குரங்கு ஒன்று கட்டியணைத்த வீடியோ சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஒடிசாவில் மொபைல் கடை நடத்தி வரும் ஒருவர், தினமும் அப்பகுதிக்கு வரும் குரங்குக்கு உணவு கொடுத்து வந்துள்ளார். இதனால் அவருடன் பழகிய அந்தக் குரங்கு, ஒருநாள் கடைக்குள் நுழைந்து நேராக அவரது மடியில் அமர்ந்துள்ளது. பின்னர் அவரைக் கட்டியணைத்து பாசத்தை வெளிப்படுத்தியுள்ளது.

Video Viral: ఒడిశాలో అరుదైన దృశ్యం.. షాపు ఓనర్‌ను హత్తుకున్న కొండ ముచ్చు.. వీడియో.. Monkey walks into shop and hugs owner in odisha video viral

குரங்கின் இந்தச் செயலால் பதற்றமடையாத கடைக்காரர், அமைதியாக அமர்ந்து அதை அரவணைத்துள்ளார். மனிதருக்கும் விலங்குக்கும் இடையே உருவான இந்த அன்பான தருணம் வீடியோவாகப் பதிவாகியுள்ளது. தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வரும் இந்தக் காட்சி, பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.