தனியார் பள்ளிக்கு ”சீல்” வைத்த அதிகாரிகள்!! இழப்பீடு தர மறுத்ததால் அதிரடி!!

 
சீல்

திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டில் செயல்பட்டு வந்த தனியார் பள்ளியில்  மே 1ம் தேதி  கழிவு நீர் தொட்டியை சுத்தப்படுத்திய போது, கோவிந்தன் மற்றும் சுப்புராயலு  இருவரும் விஷவாயு தாக்கி பலியாகினர்.  இதைத் தொடர்ந்து பள்ளியின் தாளாளர் கைது செய்யப்பட்டார். மேலும், உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக 15 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதுவரை பள்ளி நிர்வாகம் நஷ்ட ஈடு வழங்காததால், பள்ளியை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

தமிழகத்தில் பள்ளிகளில் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மராமத்து பணிகள், கட்டிடங்கள் சீரமைப்பு , புதிய கட்டிடங்கள், வண்ணம் பூசுதல் உட்பட பல்வேறு பணிகளை தனியார் பள்ளிகள் தொடங்கியுள்ளன. விடுமுறை முடிவதற்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்பட வேண்டும் என திட்டமிடப்பட்டு விரைந்து செய்து வருகின்றனர்.  

  விஷவாயு

அந்தவகையில் திருவள்ளூர் அத்திபட்டில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணிக்காக 2 தூய்மை பணியாளர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர். பேரூராட்சி தூய்மை பணியாளர்களான கோவிந்தன், ஒப்பந்த தொழிலாளர் சுப்பராயலு ஆகியோர் தொட்டிக்குள் இறங்கி சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென விஷவாயு தாக்கி மயக்கம் அடைந்தனர்.

இருவரும் மயங்கி நீண்ட நேரம் வெளியே வரவில்லை. இதனையடுத்து  காவல்துறைக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற வடசென்னை அனல் மின் நிலைய தீயணைப்பு வீரர்கள் கழிவு நீர் தொட்டியில் மயங்கிய நிலையில், இருந்த துப்புரவு தொழிலாளர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். குறுகிய இடத்தில் இருந்த கழிவறை கட்டிடம் ஜேசிபி இயந்திரம் மூலம் இடிக்கப்பட்டு கழிவுநீர் தொட்டியின் பக்கவாட்டு சுவர் இடித்து அகற்றப்பட்டது. 

போலீஸ்
தொடர்ந்து கழிவுநீர் தொட்டியில் இருந்து விஷவாயு வெளியேற வழி ஏற்படுத்தப்பட்டது. இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் கழிவுநீர் தொட்டியில் இறங்கி மயங்கிய நிலையில், இருந்த தொழிலாளர்களை ஒருவர் பின் ஒருவரக கயிறு கட்டி மேலே சடலமாக மீட்டது குறிப்பிடத்தக்கது. 

From around the web