அட பாவமே... பெண்ணின் வயிற்றில் 16 கிலோ கட்டி.. மருத்துவர்கள் அகற்றி சாதனை!

 
அறுவை சிகிச்சை

16 கிலோ எடையுள்ள கட்டியை வயிற்றுக்குள் சுமந்தபடி படாத பாடு பட்டு, நரக வேதனையை அனுபவித்து இருந்துள்ளார் ராஜஸ்தானைச் சேர்ந்த 68 வயதான பெண் ஒருவர். 

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள பகவான் மஹாவீர் புற்றுநோய் மருத்துவமனையில் 68 வயதான பெண் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பரிசோதனையில் அந்த பெண்ணின் வயிற்றில் பெரிய கட்டி ஒன்று இருப்பதைக் கண்டறிந்த மருத்துவர்கள் குழு, அறுவை சிகிச்சை செய்து, பெண்ணின் வயிற்றில் இருந்து சுமார் 16 கிலோ எடையுள்ள கட்டியை அகற்றி சாதனை புரிந்துள்ளனர். சரியான நேரத்தில் அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்து கட்டியை அகற்றியதால், மரணத்திலிருந்து அந்த பெண் காப்பாற்றப்பட்டுள்ளார்.

தனது வயிற்றுக்குள் இவ்வளவு பெரிய கட்டி இருந்தது குறித்து அந்த பெண்ணுக்கு எதுவும் தெரியவில்லை. ஆனால், கடந்த மூன்று, நான்கு மாதங்களாக தொடர்ந்து சிரமங்களை அனுபவித்து வந்துள்ளார். அவரது சிறுநீரகம் மற்றும் முக்கிய தமனிகளை பாதிக்கும் அளவுக்கு அந்த கட்டி, வயிற்றுக்குள் பெரிதாக வளர்ந்திருந்தது அவரது உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் அளவுக்கு சென்றுள்ளது. 

Jaipur

புற்றுநோயியல் நிபுணர் மருத்துவர் ஷிகா திவாரி, இந்த அறுவை சிகிச்சைக் குறித்து கூறுகையில், “அந்த பெண்ணின் வயிற்றில் 28 செமீ அளவு பெரிய கட்டியாக வளர்ந்திருந்தது. கட்டியின் அளவு மற்றும் எடை காரணமாக இந்த  அறுவை சிகிச்சை சிக்கலானதாகவும், சவாலானதாகவும் இருந்தது. எனவே சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக மருத்துவர்கள் குழு இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர் என்று கூறினார்.

அப்பெண் தற்போது ஆரோக்கியமாக இருக்கிறார் என்று மருத்துவர்கள் கூறினர்.  கடந்த 6 மாதங்களாக வாயு தொல்லை போன்று அந்த பெண்ணுக்கு இருந்து வந்துள்ளது. அப்போது அதை சாதாரண பாதிப்பு என்று கருதியுள்ளார். ஆனால், அவரது அலட்சியத்தின் காரணமாக அந்த கட்டி 28 செமீ அளவுக்கு வளர்ந்தது. கட்டியின் பாதிப்பு அதிகரிக்க தொடங்கிய காரணத்தால், சில மருத்துவர்களை சந்தித்துள்ளார். அவர்களால் இதற்கான காரணம் குறித்து சரிவர கண்டறிய முடியவில்லை.

Jaipur

இதன் பிறகு தான், அப்பெண் ஜெய்ப்பூரில் உள்ள பிஎம்சிஎச் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இவரை பரிசோதித்த மருத்துவர்கள் இவரது வயிற்றில் உள்ள 16 கிலோ கட்டி இருப்பதை கண்டறிந்தனர். மேலும், இந்த கட்டி சிறுநீரகம் மற்றும் சில முக்கிய இரத்த தமனிகளின் பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். அதன் பின்பு, அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியதன் பெயரில், அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதன் மூலம், 16 கிலோ எடையுள்ள கட்டி நீக்கப்பட்டு, தற்போது அப்பெண் நலமாக உள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web