அடேங்கப்பா... வாகன சோதனையில் ஒரே மாநிலத்தில் ரூ.271 கோடி பறிமுதல்!

 
பணம் பறிமுதல்

லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கடந்த மார்ச் மாதம் முதல் ராஜஸ்தானில் ரூ.271 கோடி மதிப்பிலான சட்டவிரோத பணத்தை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து ரூ.181 கோடி மதிப்பிலான போதைப்பொருள், மதுபானம், விலைமதிப்பற்ற உலோகங்கள், இலவசப் பொருட்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

இது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குப்தா கூறுகையில், மாநிலத்தில் பல்வேறு ஏஜென்சிகள் சந்தேகத்திற்குரிய பொருட்கள் மற்றும் தேர்தலில் சட்டவிரோதமாக பணம் பயன்படுத்துவதை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், ஜோத்பூர், பாலி, ஜெய்ப்பூர், உதய்பூர், பில்வாரா, கங்காநகர், ஜுன்ஜுனு, அல்வார், பர்மர் ஆகிய ஒன்பது மாவட்டங்களில் தலா ரூ.10 கோடிக்கு மேல் பொருட்கள் மற்றும் பணம் மீட்கப்பட்டுள்ளது என்றார்.

மாவட்ட வாரியான தரவுகளின்படி, ஜோத்பூரில் அதிகபட்சமாக ரூ.33.36 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதன்படி பாலியில் சுமார் 19.48 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஜெய்ப்பூரில் ரூ.19.01 கோடி, உதய்பூரில் ரூ.14.19 கோடி, பில்வாராவில் ரூ.14.02 கோடி, கங்காநகரில் ரூ.13.44 கோடி, ஜுன்ஜுனுவில் ரூ.11.87 கோடி, பர்மாரில் ரூ.11.17 கோடி, அல்வாரில் ரூ.10.37 கோடி மதிப்புள்ள பொருட்கள்   பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web