"அண்டா, குண்டா தரமாட்டேன்.. வேலையைத் தருகிறேன்!" - கள்ளக்குறிச்சியில் சீமான் அதிரடி!

 
சீமான் சீமான்

"உங்கள் சிந்தனையைச் சற்று மாற்றுங்கள்; ஒரே ஒருமுறை ஆட்சியை என் கையில் கொடுத்துத்தான் பாருங்களேன்" என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாகப் பேசியுள்ளார்.

கள்ளக்குறிச்சி தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்துப் பிரச்சாரம் செய்த சீமான், மாற்று அரசியல் குறித்துப் பேசியபோது,  "நான் மற்றவர்களைப் போல அண்டா, குண்டா, மிக்ஸி என இலவசங்களைத் தரமாட்டேன். மாறாக, அவற்றை நீங்களே வாங்கிக்கொள்ளும் வகையில் கைநிறையச் சம்பளத்துடன் கூடிய வேலையைத் தருவேன்."

இன்று சீமான் பரப்புரை மேற்கொள்ளும் இடங்கள்!

உலகத்தரம் வாய்ந்த கல்வி, உயர்தர மருத்துவம் மற்றும் தூய குடிநீர் ஆகிய மூன்றையும் அனைத்து மக்களுக்கும் முற்றிலும் இலவசமாக வழங்குவதே தனது இலக்கு என அவர் உறுதி அளித்தார்.

"கடந்த பல தசாப்தங்களாக நீங்கள் ஒரே மாதிரியாகச் சிந்திப்பதால்தான் அதே போன்ற ஆட்சிகள் அமைகின்றன. இந்த முறை உங்கள் மகனாகிய என்னிடம் ஒருமுறை அதிகாரத்தை ஒப்படைத்துப் பாருங்கள். நாங்கள் என்ன செய்கிறோம் என்பதைப் பார்த்துவிட்டுப் பிறகு முடிவு செய்யுங்கள்" என வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டார். மாறி மாறி ஆட்சி செய்த கட்சிகளால் மக்கள் எதிர்பார்த்த அடிப்படை மாற்றங்கள் நிகழவில்லை என்று குற்றம் சாட்டிய அவர், கொள்கையை முன்னிறுத்தி நீண்ட காலமாகத் தாங்கள் அரசியல் செய்து வருவதாகவும், இலவசங்களைக் கொடுத்து ஏமாற்றுபவர்களிடம் ஏமாற வேண்டாம் என்றும் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.