அச்சச்சோ... 350க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி - நெல்லை, தென்காசியில் மர்ம காய்ச்சல்!

 
காய்ச்சல்

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என 350க்கும் அதிகமானோர் சிகிச்சைக்காக குவிந்துள்ளது பரபரப்பையும், அப்பகுதி மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கள்ளக்குறிச்சி மருத்துவமனை

இரு மாவட்டங்களிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் 85-க்கும் மேற்பட்ட குழந்தைகளும், 105 பெரியவர்களும் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 2 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனைகளிலும் 74 குழந்தைகள், 86 பெரியவர்கள் என பலர் சிகிச்சையில் உள்ளனர். குறிப்பாக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் மட்டும் 100-க்கும் மேற்பட்டோர் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Mysterious fever claims 84 lives in 7 districts of UP

நாங்குநேரி, அம்பை, வள்ளியூர், ஆலங்குளம், பாவூர்சத்திரம், சிவகிரி, வாசுதேவநல்லூர், கடையம் உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு அதிகரித்துள்ளது.

பருவநிலை மாற்றம் காரணமாக காய்ச்சல் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பாதிப்பு உள்ள பகுதிகளில் மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. நிலவேம்பு கசாயம், கபசுர குடிநீர் வழங்கும் முகாம்களும் செயல்படுத்தப்படுகின்றன