ஆயில் இந்தியாவில் 32 அதிகாரி பணியிடங்கள்... ரூ.2.20 லட்சம் வரை சம்பளம்!
ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் கிரேடு ஏ, பி, சி பிரிவுகளில் 32 அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள இந்தியர்கள் நவம்பர் 14-ம் தேதி காலை 11 மணிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
இதன்படி, சூப்பரிண்டெண்டிங் ரிசர்ச் சயின்டிஸ்ட், சீனியர் ஆபீசர் (மெக்கானிக்கல், பெட்ரோலியம்), சீனியர் அக்கவுண்ட்ஸ் ஆபீசர், சீனியர் இன்டர்னல் ஆடிட்டர், இந்தி ஆபீசர் மற்றும் கான்ஃபிடென்ஷியல் செக்ரட்டரி உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
கிரேடு ஏ பணிகளுக்கு மாதம் ரூ.50,000 முதல் ரூ.1.60 லட்சம் வரையிலும், கிரேடு பி பணிகளுக்கு ரூ.60,000 முதல் ரூ.1.80 லட்சம் வரையிலும், கிரேடு சி பணிக்கு ரூ.80,000 முதல் ரூ.2.20 லட்சம் வரையிலும் ஊதிய விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை பணியின் பிரிவைப் பொறுத்து மாறுபடும். கணினி வழித் தேர்வுடன், கிரேடு பி மற்றும் சி பணிகளுக்கு நேர்முகத் தேர்வும், கிரேடு ஏ பணிகளுக்கு திறன் அல்லது செய்முறைத் தேர்வும் நடத்தப்படும்.கல்வித்தகுதி, வயது வரம்பு, அனுபவம் உள்ளிட்ட விவரங்கள் ஒவ்வொரு பணிக்கும் மாறுபடும். முழுமையான அறிவிப்பைப் பார்த்து விண்ணப்பிக்க, www.oil-india.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகலாம்.
