ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் கப்பலில் பயங்கர தீ விபத்து; “அமெரிக்காவின் ராணுவ கருவியாக ஈராக் மாற வேண்டாம்...” - ஈரான் கடும் எச்சரிக்கை!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்திக்கு கிழக்கே எண்ணெய் கப்பல் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக ஈரான் கடற்படை அறிவித்துள்ளது. உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்துப் பாதையில் நிகழ்ந்துள்ள இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இதற்கிடையில், எல்லையில் ராணுவப் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில் அண்டை நாடான ஈராக்கிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்பின் அரசியல் மற்றும் ராணுவக் கருவியாக ஈராக் மாற வேண்டாம் என ஈரான் அறிவுறுத்தியுள்ளது.
