ஓட்டவே தேவையில்ல... தானாகவே இயங்கும் ‘ஓலா சோலோ’ மின்சார ஸ்கூட்டர் புதிய அறிமுகம்!

 
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

 பெட்ரோல் டீசல் விலை கண்ணுக்கு எட்டிய தூரம் வரை இனிக் குறைய வாய்ப்பே இல்லை. இதனால் பலரும் மின்சார வாகனங்களுக்கு மாறி வருகின்றனர். இந்தியாவை பொறுத்தவரை ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இந்திய சந்தையில் மிகவும் பிரபலமானவை. மின்சார இரு சக்கர வாகன உற்பத்தியில்  ஓலா நிறுவனம் முண்ணனியில் இருந்து வருகிறது. இந்த வகையான ஸ்கூட்டர்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றனர்.  இ-ஸ்கூட்டர் பிரிவில் ஆரம்பம் முதலே களமிறங்கி கொடிக்கட்டிப் பறக்கும் நிறுவனமாகவும் உள்ளது.


 


ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் விற்பனை எண்ணிக்கையில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், 2024 மார்ச் மாதம் 53,000 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்று சாதனை படைத்துள்ளது.  ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் சிஇஓ இது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில்  திங்கட்கிழமை புதிய தயாரிப்பை அறிமுகம் செய்ய இருப்பதாக  அறிவித்திருந்தார். எனவே, ஓலா என்ன தயாரிப்பை விற்பனைக்குக் கொண்டு வரும் என்பதே பலரின் சந்தேகமாக அமைந்து இருக்கின்றது.
இந்நிலையில்  'ஓலா சோலோ' என புதுமையான மின்சார ஸ்கூட்டர் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. சோலோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தொழில்நுட்பம் நிரம்பியுள்ளது,

ஓலா

அதிநவீன AI திறன்களை ஒருங்கிணைத்து, புத்திசாலித்தனமான, பாதுகாப்பான மற்றும் மிகவும் வசதியான சவாரி, உள்நாட்டில் உருவாக்கப்பட்ட சிப், LMA09000 மூலம் இயக்கப்படுகிறது, சோலோ தெருக்களில் செல்ல செயற்கை நுண்ணறிவின் ஆற்றலைப் பயன்படுத்துகிறது.  "ஓலா சோலோ - இந்தியாவின் முதல் தன்னாட்சி மின்சார ஸ்கூட்டர்.சோலோ ஒரு முழு தன்னாட்சி, AI இயக்கப்பட்ட மற்றும் போக்குவரத்து ஸ்மார்ட் ஸ்கூட்டர்  Ola Electric இன் இணை நிறுவனர் பவிஷ் அகர்வால் தனது X கணக்கில் புதிய ஸ்கூட்டரின் புதுப்பிப்பைப் பகிர்ந்துகொண்டார், "'Ola Solo - இந்தியாவின் முதல் தன்னாட்சி மின்சார ஸ்கூட்டரை வழங்குகிறோம்.' சோலோ ஒரு முழு தன்னாட்சி, AI இயக்கப்பட்ட மற்றும் டிராஃபிக் ஸ்மார்ட் ஸ்கூட்டர். சவாரி செய்யுங்கள் அல்லது உங்கள் சொந்த சோலோவை ஓட்டுங்கள் எனப் பதிவிட்டுள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web