நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ... பென்ஷன் வாங்க 2 கிமீ தவழ்ந்து என்ற மூதாட்டி!

 
மூதாட்டி

 இந்தியாவில் வயதானவர்கள், ஆதரவற்றோர், விதவைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு ஓய்வூதியம் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இதனை பெறுவதற்காக 80 வயதான மூதாட்டி தவழ்ந்து சென்றது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் கியான்ஜ்கர் பகுதியில் உள்ள ரைசுவான் கிராமத்தில் வசித்து வருபவர் 80 வயதான மூதாட்டி பதூரி, இவர் தன்னுடைய ஓய்வூதிய பணத்தை வாங்குவதற்காக 2 கிலோமீட்டர் தூரம் தவழ்ந்து சென்றார்.

அரசு பணியாளர் ஒருவர், மூதாட்டியை பஞ்சாயத்து அலுவலகத்திற்கு வருவதற்காக உத்தரவு பிறப்பித்தார். அந்த நேரத்தில் அவருக்கு உதவியாக யாரும் இல்லாததால்  பதூரி தனது உடல் நிலையின் காரணமாக நடைபயணிக்க முடியாமல் தவழ்ந்தே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
இச்சம்பவம் அங்கு உள்ள வாடிக்கையாளர்களின் மற்றும் மக்களின் உள்ளத்தை புண்படுத்தியது. மக்களின் மனதில் வருத்தத்தை ஏற்படுத்திய இந்நிகழ்வு, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வழங்கும் சேவைகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

மூதாட்டி

இச்சம்பவம் குறித்த   வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதில் பொதுமக்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  மூதாட்டியின் இந்த பயணம் மற்றும் முதியோர் பராமரிப்பு குறித்து அரசு தீவிரமாக சிந்தித்து செயலாற்ற வேண்டும் எனக் குறிப்பிட்டதுடன்  அந்த  மாவட்ட BDO அதிகாரி, அவரது வீட்டிற்கே சென்று பென்ஷன் பணத்தை வழங்கவேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.  

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web