விமானப் பயணி மயங்கி சரிந்து பலி... விமானநிலையத்தில் பரபரப்பு!

 
முதியவர்

விமானப் பயணங்கள் சமீபகாலமாக பெரும் சர்ச்சைகளும், தொடர் புகார்களும் வந்தவண்ணம் உள்ளன. அந்த வகையில் மும்பை விமான நிலையத்தில் சக்கர நாற்காலி கிடைக்காமல் நீண்ட தூரம்  நடந்து சென்றதால் முதியவர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.  அமெரிக்காவின் நியூயார்க்கிலிருந்து  பிப்ரவரி  12ம் தேதி ஏர் இந்தியா விமானத்தில் மும்பைக்கு 80 வயதான  முதியவர் ஒருவர்  வந்திருந்தார். இவர் தனது குடும்பத்தினருடன் வந்த நிலையில்  ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு மேல்  அவரால் நடந்து செல்ல முடியவில்லை.  

 

 


இந்நிலையில் மும்பை விமான நிலையத்தில் அவரது குடும்பத்தினர் சக்கர நாற்காலி உதவி கோரினர். அப்போது, சக்கர நாற்காலிகள் தற்சமயம் ஸ்டாக் இல்லை. வேறுசில   பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.இதனால்  சிறிது நேரம் காத்திருக்குமாறு விமான நிலைய ஊழியர்கள்  அறிவுறுத்தினர்.  இதனால்  இமிகிரேஷன் செயல்முறை கவுன்ட்டருக்கு முதியவர் நடந்து செல்ல முயற்சித்தார்.  அப்போது, திடீரென அந்த முதியவர் மயங்கி சரிந்து விழுந்தார். இதனையடுத்து  முதியவருக்கு  உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

 

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், முதியவர் ஏற்கனவே உயிரிழந்து  விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து   ஏர் இந்தியா விமான நிறுவனம்  செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்   “ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் முதியவர்  உயிரிழந்து விட்டார்.  மேலும் உயிரிழந்தவரின் குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பில் உள்ளோம். அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறோம்.  முன்கூட்டியே முன்பதிவு செய்யும் அனைத்து பயணிகளுக்கும் சக்கர நாற்காலி உதவிகள் வழங்கப்படுகிறது”   என அறிவித்துள்ளது.  விமான நிலையத்தில் சக்கர நாற்காலி கிடைக்காமல் முதியவர் உயிரிழந்த சம்பவம் விமான பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web