தொடரும் சோகம்... காட்டு யானை தாக்கி முதியவர் பலி!

 
வேலுமணி


 
கோவை மாவட்டத்தில் புறநகர் சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக  காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. அதனை கட்டுப்படுத்த வனத்துறையினரும் குழுக்கள் அமைத்து போராடி வருகின்றனர்.  ஆனால், தொடர்ந்து ஊருக்குள்ளும், விவசாய நிலங்களுக்குள் நுழையும் யானைகள் உணவு தேடி ஆக்ரோஷமாக சுற்றி திரிகின்றன.  இதனை தடுக்கும் மக்கள் மற்றும் விவசாயிகளை தாக்கி உயிர் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.

 

காட்டு யானை
கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரியநாயக்கன் பாளையம் பழைய புதூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி வேலுமணி என்பவரை யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில், தடாகத்தில் இருந்து துடியலூர் செல்லும் சாலையில் உள்ள தாளியூர் கிராமத்தில் இன்று காலை நடைபயிற்சிக்குச் சென்ற நடராஜை அங்கு வந்த ஒற்றைக் காட்டு யானை தாக்கியது.  இதில் நடராஜ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார்.  

ஆம்புலன்ஸ்


அந்த வழியாக சென்றவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் தடாகம் காவல் துறையினர் மற்றும் கோவை சரக வனத் துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.அப்போது அங்கு கூடிய மக்கள் உயிரிழந்தவரின் உடலை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் எனவும்  ஒற்றைக் காட்டு யானைகளால் உயிரிழப்புகள் தொடர்வதால், அவற்றை அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டுவிட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!