அப்படி போடு... பழைய சோறும், பச்ச மொளகாவும் புற்றுநோயைக் கூடத் தடுக்கும்... ஆய்வு முடிவுகள் நெத்தியடி!

 
பழைய சோறு

 ஆற்றுநீர் வாதம் போக்கும், அருவி நீர் பித்தம் போக்கும், சோற்று நீர் இரண்டையும் போக்கும் என்பது காலம் காலமாக நம்மிடையே கடைப்பிடிக்கப்பட்டு வரும் முதுமொழி.
இன்று பாஸ்ட்புட் கலாச்சாரத்தில் பிரியாணிகளும், பீசாக்களும் பெருகி வருகின்றன. பழைய சோற்றை பைவ் ஸ்டார் ஹோட்டல்களில் மண் பானைகளில் வைத்து சாப்பிடுவது பேஷனாகி வருகிறது. பழைய சோறு குறித்த ஆய்வுகளில் இவை புற்றுநோயைக் கூட தடுக்கவல்லவை என நிரூபிக்கப்பட்டுள்ளது.  
நொதித்த அரிசிக்கஞ்சி தண்ணீரில், உயிரி மூலக்கூறுகள்  அதிகமிருப்பத்தால் குடல் செல்களின் எதிர்ப்புத் தன்மையை மூலக்கூறு வெளிப்பாடு  மூலம் அதிகமாக்குவதால், "பழைய சோறு" பயனுள்ளதாக உள்ளது எனக் கூறுகின்றன ஆய்வு முடிவுகள்.   

பழைய சோறு


தமிழகத்தில் தொன்றுதொட்டே, பழைய சோறு மற்றும் சோற்று நீரில் நல நுண்ணுயிரிகள் அதிகமிருந்து குடல் சுகாதாரத்தை பேணிகாப்பது பரம்பரை அறிவாக இருந்து வந்துள்ளது. இவை குடலுக்கு நன்மை விளைவிக்கும் நலநுண்ணுயிரிகள். நொதித்தல் மூலமாக வெளியாகும் வளர்சிதைமாற்ற வேதிப்பொருட்கள் குடலின் செல்களை வலிமைப்படுத்தி குடல் சுகாதாரத்தை பேணிகாக்கின்றன.  நொதித்தல் காரணமாக உருவாகும் வளர்சிதைமாற்ற வேதிப்பொருட்கள் குடல் செல்களை வீக்கம் மற்றும் புற்றுநோய் பாதிப்பிலிருந்து காக்கிறது என்கின்றன  ஆய்வு முடிவுகள் .  

பழைய சோறு
வடித்த சோறு ஆறியபின், நீர் கலக்கப்பட்டு, மண்பாத்திரத்தில் 10 மணி நேரம் ஊற வேண்டும். இதன் பிறகு பெறும் பழைய சோற்று நீரில் 200க்கும் மேற்பட்ட வளர்சிதைமாற்ற வேதிப்பொருட்களும், நல நுண்ணுயிரிகளும் வளர்கின்றன. நம் முன்னோர்களின் அறிவியல் திறனுக்கு பழையசோறும், நீராகாரமும் சிறந்த எடுத்துக்காட்டாக அமைகின்றன.  நமது பாரம்பரிய உணவான பழைய சோற்றை இனியாவது,   அதிகம் உட்கொண்டு நமது சுகாதாரத்தை பேணிகாக்க வேண்டும்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web