கேரளத்தின் புதிய ஆளுநராக ஓம் பிரகாஷ் மாத்தூர் பதவியேற்பு!

 
கேரளா

 

கேரளத்தின் புதிய ஆளுநராக ஓம் பிரகாஷ் மாத்தூர் வெள்ளிக்கிழமை (அக். 23) பதவியேற்றுக் கொண்டார்.திருவனந்தபுரத்தில் உள்ள லோக் பவனில் நடைபெற்ற விழாவில், கேரள உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சௌமன் சென் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கேரள முதல்வர் வி.டி. சதீசன், சட்டப்பேரவைத் தலைவர் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

Om Prakash Mathur sworn in as 29th Governor of Kerala | Mathrubhumi English

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஓம் பிரகாஷ் மாத்தூர், இதற்கு முன்பு சிக்கிம் மாநில ஆளுநராகப் பதவி வகித்தார். பாஜகவின் தேசியப் பொதுச் செயலாளராகவும், ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்கேரள ஆளுநராக இருந்த ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஓம் பிரகாஷ் மாத்தூர் கேரளத்துக்கு மாற்றப்பட்டார்.