ஓமன் கடலில் துள்ளிய 2 இளஞ்சிவப்பு டால்பின்கள்... வைரல் வீடியோ!
ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் உள்ள புகழ்பெற்ற குந்தாப் கடற்கரை அருகே, 2 இளஞ்சிவப்பு நிற டால்பின்கள் கடலில் துள்ளிக்குதித்து நீந்திய காட்சி சுற்றுலாப் பயணிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சாம்பல் நிற டால்பின்கள் கூட்டத்துடன் இவை நீந்திச் சென்றதைப் பார்த்த சுற்றுலாப் பயணிகள், தங்கள் செல்போன்களில் வீடியோ பதிவு செய்தனர். அந்தக் காட்சி தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
🐬💖 Pink dolphins Surfacing alongside a grey one, reportedly off Oman! The pink comes from fading pigment that lets blood vessels near the skin show through. 🌊 Spotting one is said to bring luck… a whole pod must be extra magical! 🪄 #PinkDolphin #Oman #MarineLife https://t.co/drQV1TYXLl
— Paulose Jacob Peter (@Anand02908794) October 22, 2026
பொதுவாக அமேசான் நதிப் பகுதியில் காணப்படும் இளஞ்சிவப்பு டால்பின்கள் கடல் பகுதியில் தென்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் கவனம் பெற்றுள்ளது. இருப்பினும், வீடியோவில் காணப்படும் டால்பின்களின் இனம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
சில கடல்வாழ் உயிரின நிபுணர்கள், இவை இந்தோ-பசிபிக் கூன் டால்பின்களாக இருக்கலாம் எனக் கருதுகின்றனர். சில டால்பின் இனங்களில் வயது மற்றும் தோலுக்கு அடியில் உள்ள ரத்த நாளங்களால் இளஞ்சிவப்பு சாயல் தோன்றக்கூடும். இந்தக் காட்சியின் உண்மைத்தன்மையையும் டால்பின்களின் இனத்தையும் உறுதிப்படுத்த கூடுதல் ஆய்வு தேவைப்படுகிறது
