இந்தியாவில் ஒமைக்ரான் அலை ?! நிபுணர்களின் விளக்கம் இதோ !!

 
இந்தியாவில் ஒமைக்ரான் அலை ?! நிபுணர்களின் விளக்கம் இதோ !!


இந்தியாவில் கொரோனா 2 வது அலை பல்வேறு மாநிலங்களில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது அடுத்ததாக புதிய உருமாறிய வைரஸ் ஒமைக்ரான் பரவ தொடங்கியுள்ளது. இது பல உலக நாடுகளிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இதன் பாதிப்பு எப்படி இருக்கும் என பல்வேறு கட்ட ஆய்வுகளும், பரிசீலணைகளும் நடைபெற்று வருகின்றன.

இந்தியாவில் ஒமைக்ரான் அலை ?! நிபுணர்களின் விளக்கம் இதோ !!

அந்த வகையில் இது குறித்த மகாராஷ்டிரா சுகாதாரத் துறை கூடுதல் செயலர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் ஒமைக்ரான், தென் ஆப்பிரிக்காவில் முதலில் நவம்பர் 24ல் கண்டறியப்பட்டது. குறுகிய காலத்திலேயே உலகம் முழுவதும் 38க்கும் மேற்பட்ட நாடுகளில் கால் பதித்துள்ளது.

இந்தியாவில் ஒமைக்ரான் அலை ?! நிபுணர்களின் விளக்கம் இதோ !!


இந்தியாவில் தற்போதய நிலவரப்படி 5 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசியை செலுத்திக் கொள்தல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி இவைகளை கடைப்பிடிக்க வேண்டும். ஒமைக்ரான் தற்போதைக்கு புரியாத புதிர். விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். கொரோனா டெல்டா வகையை மீறி ஒமைக்ரான் பரவுமா என்பது குறித்த தீவிரமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் அடுத்த 6 முதல் 8 வாரங்கள் மிக முக்கியமானவை” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

From around the web