வெளியூர் செல்லும் பயணிகளுக்கு குட்நியூஸ்... மீண்டும் ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்து இயக்கம்!
சென்னையிலிருந்து வெளியூர் செல்பவர்கள் கிளாம்பாக்கம் செல்ல வேண்டியிருப்பதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இது குறித்த பொதுநல மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்நிலையில் உயர் நீதிமன்றத்தில் ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு அருகில் உள்ள டிராவல்ஸ் நிறுவனங்களின் பணிமனைகளிலும் மற்றும் போரூர் டோல் கேட் அருகிலும் இருந்தும் தமிழகத்தின் தென் பகுதிகளுக்கு இயக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதன்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் அடுத்த உத்தரவு வரும் வரை ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு மற்றும் போரூர் டோல் கேட்டில் இருந்து தமிழகத்தின் தென்பதிகளுக்கு இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழக அரசால் கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையம் அந்த பகுதியை சேர்ந்த மற்றும் ஈ சி ஆர் பகுதியை சேர்ந்த பயணிகளுக்கும் பயனுள்ளதாக உள்ளது. இந்த பேருந்து நிலையத்தை சென்னையிலிருந்து புறப்படும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் பயன்படுத்தி 20 சதவீதத்திற்கு மேல் பயணிகளை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து ஏற்றி செல்கிறோம் இதனால் அந்த ஏரியா பயணிகளுக்கு மிக்க பயனுள்ளதாக அமைந்துள்ளது. மேலும் இந்த பேருந்து நிலையத்துடன் எலக்ட்ரிக் ட்ரெயின் மற்றும் மெட்ரோ ட்ரெயின் கனெக்டிவிட்டி செய்து முடிக்கும் போது பயணிகளுக்கு அதிக பயன்களை தரும்.

மற்றும் ஈசிஆர் சாலை வழியாக பாண்டிச்சேரி, பூந்தமல்லி சாலை வழியாக கிருஷ்ணகிரி, பெங்களூர் செல்லும் வாகனங்கள் கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் தென்பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் கோயம்பேடு அருகில் உள்ள டிராவல்ஸ் நிறுவனங்கள் மற்றும் போரூர் டோல் ஆகிய இடங்களில் இருந்து கிளாம்பாக்கம் வழியாக இயக்கப்படும் என்பதை தெரிவித்துக் தெரிவித்துக் கொள்கிறோம்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!
