பிப்ரவரி 12ம் தேதி நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!
தமிழகத்தில் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு 2023 அக்டோபா் 14ம் தேதி தொடங்கிய பயணிகள் கப்பல் சேவை பல்வேறு காரணங்களால் சில நாள்களிலேயே நிறுத்தப்பட்டது. இந்த கப்பல் போக்குவரத்து 2024ல் மீண்டும் தொடங்கப்பட்டது.

இடையில் அவ்வப்போது கப்பல் சேவையை நிறுத்தவும் , இயக்குவதும் என மாறி மாறி பின்பற்றி வந்தனர். இதைத்தொடர்ந்து வடகிழக்கு பருவமழை தொடங்கியதும் கப்பல் சேவை மீண்டும் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

தற்போது இந்த பருவமழை முடிவடைந்த நிலையில் கப்பல் சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளனர். அதன்படி இந்தியா-இலங்கை இடையேயான சிவகங்கை என்ற பயணிகள் கப்பல் சேவை பிப்ரவரி 12 ம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!
