“சோதனைகளை வென்று சாதனைகள் படையுங்கள்” - சர்வதேச இளைஞர் நாளில் முதல்வர் விஜய் வாழ்த்து!

 
விஜய்

சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு, தமிழக முதலமைச்சர் விஜய் இளைய சமுதாயத்தினருக்குத் தனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

"நம்பிக்கையின் வெளிச்சமாகவும், நேர்மறையான மாற்றத்தின் முகவரியாகவும் திகழும் இளைய சமுதாயத்திற்கு எனது உளங்கனிந்த சர்வதேச இளைஞர் நாள் வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

புதிய எண்ணங்கள், அஞ்சா நெஞ்சம் மற்றும் முடிவில்லாத பேராற்றலால் உலகை நேர்மறையாக மாற்றும் வல்லமை இளைஞர்களிடம் மட்டுமே உள்ளதாகப் பாராட்டியுள்ளார்.

இளைஞர்கள் தங்களது பாதையில் வரும் சோதனைகளை வென்று, சாதனைகள் படைத்துத் தொடர்ந்து முன்னேறிச் செல்ல வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். உலகளவில் அனைத்துத் துறைகளிலும் நமது இளைஞர்கள் கொடிகட்டிப் பறக்க வேண்டும் என்று வாழ்த்திய முதலமைச்சர் விஜய், "உங்கள் கனவுகள் நனவாகட்டும்; சாதனைகள் தொடர்ந்து தொடரட்டும்" எனக் கூறி தனது அறிக்கையை நிறைவு செய்துள்ளார்.