ஓணம் பண்டிகை: விமானக் கட்டணம் 3 மடங்கு வரை கிடுகிடு உயர்வு!

 
இண்டிகோ விமானம் திருச்சி

வரவிருக்கும் ஓணம் பண்டிகையைக் கொண்டாடச் சொந்த ஊர் திரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், சென்னையில் இருந்து கேரள மாநிலத்தின் முக்கிய நகரங்களுக்குச் செல்லும் விமானங்களின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

வழக்கமாக ரூ.5,336 ஆக இருக்கும் சென்னை-கொச்சி வழித்தடத்திற்கான விமானக் கட்டணம், பண்டிகைக் காலத் தேவை காரணமாக தற்போது ரூ.14,843 ஆக உயர்ந்துள்ளது.

ஓணம்

சென்னை-திருவனந்தபுரம் வழித்தடத்தில் வழக்கமாக ரூ.5,853 ஆக வசூலிக்கப்பட்ட விமானக் கட்டணம், தற்போது ரூ.14,700 ஆகக் கடுமையாக அதிகரித்துள்ளது.

ஓணம்

பண்டிகைக் காலங்களில் பேருந்துகள் மற்றும் ரயில்களில் முன்பதிவு இடங்கள் விரைவாக நிரம்பிவிடும் நிலையில், விமானக் கட்டணமும் இப்படி மூன்று மடங்கு வரை உயர்ந்துள்ளது மலையாளி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.