ஓணம் பண்டிகை.. இன்று ரயில்வே முன்பதிவு மையங்கள் அரை நாள் மட்டுமே செயல்படும்!
Aug 26, 2026, 10:30 IST
ஓணம் பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தில் உள்ள கணினிமயமாக்கப்பட்ட பயணிகள் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் இன்று ஆகஸ்ட் 26 ஞாயிற்றுக்கிழமை பணிநேர முறையைப் பின்பற்றிச் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 08:00 மணி முதல் மதியம் 02:00 மணி வரை மட்டுமே (ஒரு ஷிஃப்ட்) முன்பதிவு மையங்கள் இயங்கும். நேரில் சென்று இரயில் பயணச்சீட்டு முன்பதிவு செய்யத் திட்டமிடும் பயணிகள் இந்த நேர மாற்றத்தைக் கவனத்தில் கொண்டு தங்களது பயணத் திட்டங்களை அமைத்துக்கொள்ளுமாறு தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
