ஓணம் சிறப்பு பூஜைகள் நிறைவு.. சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு!
Aug 30, 2026, 09:30 IST
ஓணம் பண்டிகையை முன்னிட்டுச் சபரிமலை ஐயப்பன் கோயிலில் நான்கு நாட்கள் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.
ஓணம் சிறப்பு வழிபாடுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று இரவு 10 மணிக்குச் சாத்தப்பட்டது.

ஓணம் பண்டிகையின் முக்கிய நாளான திருவோணத்தன்று கோயிலுக்கு வருகை தந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்குச் சிறப்பு ஓண விருந்து வழங்கப்பட்டதுடன், அவர்கள் ஐயப்பனைத் தரிசித்து வழிபட்டனர். வருகிற புரட்டாசி மாதப் பூஜைக்காக வரும் செப்டம்பர் 16-ஆம் தேதி மாலை 5 மணிக்குச் சபரிமலை கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டுப் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
