ஓணம் ஸ்பெஷல்: பாரம்பரியச் சுவையில் 'ஓலன்' செய்முறை!

 
ஓணம் ஓலன்

கேரளா ஓணம் சத்யா உணவுகளில் மிக முக்கியமான, மனமூட்டும் பாரம்பரிய உணவான 'ஓலன்'  எளிய முறையில் தயாரிக்கும் செய்முறை விளக்கம்.

தேவையான பொருட்கள்: 

வெள்ளை பூசணிக்காய் (நறுக்கியது)

சேப்பங்கிழங்கு (வேகவைத்தது)

காராமணி (வறுத்து வேகவைத்தது)

தடிமனான தேங்காய்ப்பால்

பச்சை மிளகாய் (காரத்திற்கு)

தேங்காய் எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு & உப்பு (தேவையான அளவு)

ஓணம்

செய்முறை:

காய்கறிகளை வேகவைத்தல்: நறுக்கிய வெள்ளை பூசணிக்காய், வேகவைத்த சேப்பங்கிழங்கு மற்றும் வறுத்த காராமணி ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் சிறிதளவு நீர் ஊற்றி நன்றாக வேகவைக்க வேண்டும்.

பால்கூட்டு சேர்த்தல்: காய்கறிகள் வெந்தவுடன், தேவையான அளவு உப்பு மற்றும் காரத்திற்கு ஏற்ப நறுக்கிய பச்சை மிளகாய் சேர்க்க வேண்டும்.

தேங்காய்ப்பால்: இதனுடன் தடிமனான தேங்காய்ப்பாலை ஊற்றி, மிதமான தீயில் வைத்து லேசாகச் சூடேற்ற வேண்டும் (கொதிக்க விடக்கூடாது).

தாளிப்பு: இறுதியாக மற்றொரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு தாளித்து ஓலனில் கொட்டினால், மணமணக்கும் சுவையான 'ஓலன்' தயார்!