விவசாயிகள் போராட்டத்தில் மாரடைப்பால் ஒருவர் பலி... பரபரக்கும் போராட்டக்களம்!

 
கியான்சிங்

விளைபொருட்களுக்கு ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும் என  கடந்த 3 நாட்களாக பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் தலைநகர் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள்  அம்பாலா அருகே சம்பு எல்லையில் போராட்டம் நடத்தி வரும் நிலையில் விவசாயிகளில் ஒருவர் இன்று மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  
விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு  சட்டபூர்வ உத்தரவாதம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  வருகின்றனர். இதில் பஞ்சாப், ஹரியாணா உட்பட  பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணி நடத்தினர்.

 

 விவசாயிகள் போராட்டம்
 போராட்டம் தொடங்கப்பட  முதல் நாளிலேயே ஹரியானா அம்பாலா மாவட்டம் சம்பு எல்லையில் போலீஸார் மற்றும் பாதுகாப்புப் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனை மீறி செல்ல முயன்ற விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டுகளும் வீசப்பட்டன. இதனால் தொடர்ந்து முன்னேற முடியாமல் கடந்த 3 நாள்களாக சம்பு எல்லையிலேயே விவசாயிகள் காத்துக் கிடக்கின்றனர்.   போராட்டக் களத்தில் இருந்த 63 வயதான கியான் சிங் என்ற முதியவருக்கு இன்று காலை  நெஞ்சுவலியால் துடித்தார். உடனடியக  பஞ்சாபின் ராஜ்புராவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு  மேல் சிகிச்சைக்காக பாட்டியாலாவில் உள்ள ராஜீந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு கியான் சிங்கை பரிசோதனை செய்த  மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

 

டெல்லி போராட்டம்
 பஞ்சாபின் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் வசித்து வரும்  கியான் சிங்  2 நாட்களுக்கு முன்பு சம்பு எல்லைக்கு வந்து விவசாயிகளின் 'டெல்லி சலோ' பேரணியில் கலந்து கொண்டார்.  தங்களுடன் போராட்டக்களத்தில் இருந்த விவசாயி உயிரிழந்த சம்பவம் மற்ற விவசாயிகளிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web