ஒரு கிராம் தங்கம் ரூ. 30,000 வரை உயரலாம்.. சந்தை வல்லுநர்கள் கணிப்பு!

 
தங்கம்

உலகளாவிய பொருளாதார மாற்றங்கள் மற்றும் தற்போதைய சர்வதேசச் சூழல்களின் பின்னணியில், தங்கத்தின் விலை வரும் ஆண்டுகளில் கற்பனை செய்ய முடியாத அளவிற்குத் தாறுமாறாக உயர வாய்ப்புள்ளதாகச் சந்தை வல்லுநர்கள் கணிப்புகளை வெளியிட்டுள்ளனர்.

தங்கச் சந்தை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள புதிய மதிப்பீடுகளின்படி, சர்வதேச அளவில் தற்போது நிலவி வரும் பொருளாதாரப் போக்குகளும், உலகளாவிய அரசியல் மற்றும் வர்த்தகச் சூழல்களும் இதே நிலையில் நீடித்தால், அடுத்த சில ஆண்டுகளில் தங்கத்தின் விலை அதன் தற்போதைய சந்தை மதிப்பில் இருந்து கிட்டத்தட்ட இருமடங்காக உயரக்கூடும்.

தங்கம்

குறிப்பாக, வரும் 2030-ம் ஆண்டுக்குள் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 30,000 என்ற இமாலய எல்லையை எட்டக்கூடும் என ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். இந்தக் கணிப்புகள் நிஜமாகும் பட்சத்தில், நடுத்தரக் குடும்பங்களின் தங்கப் பயன்பாடு மற்றும் முதலீட்டுச் செலவுகள் பெருமளவு பாதிக்கப்படும்.

வல்லுநர்களின் இந்த விபரப்படி பார்த்தால், வரும் 2030-ல் 10 கிராம் தங்கம் வாங்க மட்டுமே தோராயமாக ரூ. 3 லட்சம் வரை செலவழிக்க வேண்டியிருக்கும். இதன் மூலம் ஒரு சவரன் தங்கத்தின் விலை மட்டுமே சுமார் ரூ. 2 லட்சத்து 40 ஆயிரம் என்ற நிலையை எட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கம் தங்கத்தின்

தங்கத்தை ஒரு பாதுகாப்பான முதலீடாகக் கருதி உலகளவில் வங்கிகளும், முதலீட்டாளர்களும் தொடர்ந்து அதிகளவில் வாங்கிச் சேமிப்பதே இந்தத் தொடர் விலை உயர்விற்கான முக்கியக் காரணியாகப் பார்க்கப்படுகிறது. இந்த அதிர்ச்சித் தகவல் தங்கம் வாங்கும் திட்டத்தில் இருக்கும் சாமானிய மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.