மோட்டார் சைக்கிள் மீது தனியார் பேருந்து மோதி ஒருவர் பலி!

 
பைக் விபத்து

சென்னை திருமுல்லைவாயல் பகுதியில் தனியார் பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் கார் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்ப்பேட்டை பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் தனஞ்செயன் (28), தனது மோட்டார் சைக்கிளில் திருமுல்லைவாயலில் இருந்து ஆரிக்கம்பேடு பிரதான சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது திருமுல்லைவாயல் எட்டியம்மன் கோவில் அருகே சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த தனியார் பேருந்து எதிர்பாராதவிதமாக அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

பள்ளி மானவி தற்கொலை

இந்த கோர விபத்தில் பலத்த காயமடைந்த தனஞ்செயன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வுப் காவல்துறையினர் உடனடியாகக் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தலைமறைவான அல்லது கைது செய்யப்பட்டுள்ள தனியார் பேருந்து ஓட்டுநரான முகப்பேரைச் சேர்ந்த பாபு என்பவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.