அம்...மாடியோவ்... பிச்சைக்காரரிடம் ரூ.1.44 லட்சம் ஐபோன்… !

ராஜஸ்தான் மாநிலத்தில் அஜ்மீர் பகுதியில் வசித்து வரும் மாற்றுத்திறனாளி பிச்சைக்காரர் ஒருவர் விலை உயர்ந்த செல்போனை வைத்திருந்தார். அந்த ஐ போனின் விலை 1.44 லட்சம் ரூபாய். இந்த iphone 16 ப்ரோ மேக்ஸ் செல்போன் 2024 செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த பிச்சைக்காரர் விலை உயர்ந்த செல்போனை கையில் வைத்திருந்ததை பார்த்த ஒரு வாடிக்கையாளர் அவரிடம் இந்த செல்போன் எப்படி வந்தது என கேட்டிருந்தார். அதற்கு அந்த பிச்சைக்காரர் நான் பிச்சை எடுத்ததில் வாங்கியது எனக் கூறுகிறார். அந்த மாற்றுத்திறனாளி பிச்சைக்காரர் ரொக்கமாக பணத்தை கொடுத்து போன் வாங்கியதாக கூறுகிறார்.
மேலும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் சிலர் இது போலியாக உருவாக்கப்பட்டு இருக்கலாம் எனக் கூறுகின்றனர். அதே சமயத்தில் பலரும் தங்கள் மனதில் தோன்றும் பலவித கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!