பெண்களுக்கு ஆட்டோ வாங்க ரூ 1லட்சம் மானியம்!! முதல்வர் அதிரடி அறிவிப்பு!!

 
ஆட்டோ வாங்க மானியம்

இன்று ஆகஸ்ட் 15ம் தேதி செவ்வாய்கிழமை இந்தியாவின்  77வது சுதந்திர தினவிழா  நாடு முழுவதும் கோலாகலமாக  கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க வீடுகள், கடைகள், நிறுவனங்களில் கொடியேற்றி புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். தமிழகத்தில்  சென்னை கோட்டை கொத்தளத்தில்  3வது முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் முதல்வர்  மு.க.ஸ்டாலின்.

ஆட்டோ வாங்க மானியம்

தமிழக மக்களுக்கு உரையாற்றிய  முதல்வர் ஸ்டாலின்  திமுக அரசின் திட்டங்கள், சுதந்திர போராட்ட வீரர்கள்  வரலாறு பற்றிய கருத்துக்களை  எடுத்துரைத்தார்.  பல்வேறு அறிவிப்புக்களையும் வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் ஓலா, உபேர், ஸ்விகி, சொமேட்டோ   ஊழியர்களுக்கு தனி நலவாரியம் அமைக்கப்படும்.  சென்னை போன்ற பெருநகரங்களில் தொடங்கி  ஓலா, ஊபர், ஸ்விகி, சொமேட்டோ போன்ற நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தனிவாரியம் அமைக்கப்படும்.

ஆட்டோ வாங்க மானியம்

இவர்கள் பல பகுதிகளில் மக்களுக்கு நிறைவான சேவைகளை  வழங்கி வருகின்றனர். இவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு  அவர்களுக்கென தனியே நல வாரியம் ஒன்று அமைக்கப்படும்.  பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு   புதிதாக ஆட்டோ வாங்க ஒரு லட்சம் மானியம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web